Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்கள் பெறுவது தொடர்பான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களாலோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்கிற மத்திய அரசு திட்டம், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்திலும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-க்கு உட்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்போர் தேசத்தின் எந்த மாநிலத்திலும், எந்த ரேஷன்கடையிலும் அவரது குடும்பத்துக்கான உணவு தானியத்தை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்ட பயனாளிகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்குட்பட்டு முன் னுரிமை ரேஷன் கார்டு அல்லது அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு பெற்றிருக்க வேண்டும்.
அந்த கார்டை இங்கு கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், பயனாளியின் ஆதார் அட்டை எண் மற்றும் கைரேகை பதிவுகள் சரிபார்த்த பின்னர் எந்த ரேஷன் கடையில் இருந்தும் உணவு தானியங்களான அரிசி மற்றும் கோதுமையை அவரது குடும்ப உறுப்பினர் தகுதிக்கு ஏற்ற அளவு பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய அரசு நிர்ணயித்தபடி, அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.3 மற்றும் கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.2 செலுத்தி பெற வேண்டும்.
இத்திட்டத்தில் அரிசி மற்றும் கோதுமை தவிர கூட்டுறவு அங்காடி விற்பனை செய்யும் இதர வெளிமார்க்கெட் பொருட்களை உரிய விலையில் பெற இயலும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT