Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM

முதல்வருக்கு காதர் மொகிதீன் நன்றி :

திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தீர்மானம் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றியிருப்பது சட்டப்பேரவை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முந்தைய அதிமுக அரசு பதிவு செய்த வழக்குகளை திரும்பப் பெற்றதற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இதேபோல, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x