Published : 09 Sep 2021 03:16 AM
Last Updated : 09 Sep 2021 03:16 AM
தமிழக சட்டப்பேரவையின் 2021-2022-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 22-ம் தேதி கூடுவது என முடிவு செய்துள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்களில் தமிழில் மட்டும்) மனுதாரர் அல்லது மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, ‘தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை - 600009’ என்ற முகவரி க்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப் பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்து மனுக்கள் இருக்கலாம்.
மனுக்கள் ஒரேயொரு பிரச் சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்த தாகவும் இருக்க வேண்டும். மனுக் கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மனுவில் உள்ள பொருள் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது.
சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்கு உட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு தென்காசி மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.
ஒரே மனுதாரர் பல மனுக் களை அனுப்பியிருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் படும். மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்துகொள் ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும். 30-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று, தென்காசி ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT