Published : 07 Sep 2021 03:14 AM
Last Updated : 07 Sep 2021 03:14 AM
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கடலூரில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
அப்போது பேசிய ஆட்சியர், "தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக கடலூர் மாவட்டத்தில் சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் 2 மாதங்கள் நடைபெறும். இந்த முகாமில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியப்படவுள்ளது.
நடுவீரப்பட்டு, ஒரையூர், மருங்கூர், வடலூர், மங்கலம்பேட்டை, நல்லூர்,மங்களூர்,கம்மாபுரம், ஒரத்தூர்,ஆயக்குடி,சிவக்கம், கிருஷ்ணாபுரம், புதுசத்திரம் ஆகிய வட்டார மருத்துவமனைகளில் வரும் 30-ம் தேதி வரை எக்ஸ்ரே வசதியுடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் காசநோய்கண்டறியும் முகாம் நடைபெறு கிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் சளி பரிசோ தனை, எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். காசநோய் கண்டறியப்பட்டால் அனைத்து அரசு மருத்துவமனை களிலும் காசநோய் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். சிகிச்சை காலம் முடியும் வரை 6 மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்படும்.வரும் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT