Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

விழுப்புரம் உள்ளாட்சித் தேர்தலுக்காக - 2,948 வாக்குச்சாவடிகளில் 24,373 ஊழியர்கள் நியமனம் :

உள்ளாட்சித் தேர்தலையொட்டி அனைத்துத் துறை தலைமை அலுவலர்கள் மற்றும் வட்டார அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக 2,948வாக்குச்சாவடிகளில் 24,373 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்டங்களின் பிரிவினை யால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் 9 மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சி மன்ற தலைவர்கள். 5,088 வார்டு உறுப்பினர்கள். 13 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள். 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

தேர்தல் பணிக்காக விழுப்புரம் ஆட்சியரக கூட்ட அரங்கில்நேற்று ஆட்சியர் மோகன்தலைமையில் வாக்குச் சாவடி அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் செய்திட அனைத்துத் துறை தலைமை அலுவலர்கள் மற்றும் வட்டார அளவி லான அனைத்து நிலை அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,948 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 24,373 எண்ணிக்கையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இப்பணிக்காக, விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை தலைமை அலுவலர்களும், அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களை இப்பணியில் முழுமையாகப் பொறுப்பாக்கி குறித்த காலத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்து அவ்விவரங்களை தொகுப்பு அறிக்கையாக வழங்கிட வேண்டும். மேலும், நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புத் தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பை அளித்திடுமாறு இக்கூட் டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திட்ட இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x