Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM
வருங்கால வைப்பு நிதி செலுத்தும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்தோருக்கான குறைதீர்வுக் கூட்டம் காணொலி வாயிலாக வரும் 9-ம் தேதி காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.
காணொலிக்கான இணைப்பு https://meet19.webex.com/meet/pr1266655945 ஆகும். எனவே, உறுப்பினர்கள் தங்களது குறைகளை பெயர் மற்றும் வருங்கால வைப்பு நிதி எண், ஓய்வூதிய எண் உள்ளிட்ட விவரங்களுடன் தெளிவாக எழுதி வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம், எஸ்-4, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-3, சத்துவாச்சாரி, வேலூர்-632009 என்ற முகவரிக்கு வரும் 7-ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரிதுராஜ் மேதி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT