Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மேல உசேன் நகரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (30), சென்னை தேனாம்பேட்டை யுவராஜ்(27), ராமகிருஷ்ணன் (23), மகேஷ்(22), திருக்கழுக்குன்றம் சத்யா(20) ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (38) என்பவர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் எஸ்பி மணி பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா நேற்று 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment