Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
எரிசக்தி மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் பல்வேறு வகையிலான தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் இந்திய தொழில் கூட்டமைப்பு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது.
நிகழாண்டில் இதற்கான கூட்டம் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில்வே பணிமனைகளில் தேசிய அளவில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை சிறந்த ஆற்றல் திறனுடைய பணிமனையாக தேர்வு செய்யப்பட்டு, சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக பெறும் சிறப்பையும் பெற்றுள்ளது.
கரோனா காலத்தில் உற்பத்தியை 19.42 சதவீதம் பெருக்கியது, 25.6 சதவீதத்துக்கும் குறைவான எரிசக்தி பயன்பாடு, 2 குறுங்காடுகளை நிறுவியது, கரியமிலவாயு வெளியீடு 28.87 சதவீதம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT