Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM

நெல்லை மாவட்டத்தில் 50 வாகனங்கள் மூலம் தடுப்பூசி : பள்ளிகளில் ஆய்வு செய்த ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 50 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள் நேற்று தொடங் கின. இப்பள்ளிகளில் அரசின் நிலை யான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி அரசு உயர் நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணி யாளர்கள் என்று இதுவரை 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பெற்றோர்கள் முன்வரும் பட்சத்தில் பள்ளிகளிலே தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படும். பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்யவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளிடம் உடல்நிலை குறித்தும் கண்காணிக்கப்படும்.

பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின் பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 50 சதவீதம் மாணவ, மாணவிகளை சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்து பாடம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒரு கண்காணிப்பு அறை ஏற்படுத்தப் பட்டு மாணவர்கள் மற்றும் அவரது குடும்ப உறப்பினர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற ஏதாவது நோய்த்தொற்று உள்ளதா என கேட்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 5.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளது. 50 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றியம் மட்டு மல்லாமல் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் அனைவரும் முன்வந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x