Published : 30 Aug 2021 03:15 AM
Last Updated : 30 Aug 2021 03:15 AM
பரமத்தி வேலூர் அருகே டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான்சுந்தர், காவல் ஆய்வாளர் திலகவதி ஆகியோர் தலைமையிலான போலீஸார் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு திருமணமண்டபம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் டேங்கர் லாரி ஒன்று நின்றிருந்தது.
லாரியை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில், 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது. இந்தலாரி சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம்இராந்தகத்தைச் சேர்ந்த ஜெயசீலன் (36), திண்டுக்கல்மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த கிளீனர் குபேந்திரபாண்டியன் (35) மற்றும் பரமத்திவேலூர் அருகே கரையாம்புதூரைச் சேர்ந்த குணசேகரன் (49) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோகன்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT