Published : 30 Aug 2021 03:16 AM
Last Updated : 30 Aug 2021 03:16 AM

கையுந்து பந்து சங்கம் சார்பில் தொடர் ஓட்டம் : எஸ்.பி., விஐடி துணை தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

காட்பாடியில் தொடர் ஓட்டப்பந்தய போட்டியை எஸ்.பி., செல்வகுமார், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்கம் சார்பில், ‘பிட் இந்தியா ப்ரீடம் 2.0’ என்ற தொடர் ஓட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட கையுந்து பந்து சங்கத்தின் கவுரவத் தலைவரும், விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் ஆகியோர் தலைமை வகித்து போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 250-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து விஐடி பல்கலைக்கழகம் வரை ஓடினர். உடல் ஆரோக்கியம், மன உறுதியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இப்போட்டிகள் நடத்தப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித் தனர்.

நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட கையுந்து பந்து சங்கத்தின் தலைவர் தியாகசந்தன், துணைத் தலைவர் வினோத்குமார், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் தினகரன், ரோட்டரி சங்க பிரமுகர் நிர்மல் ராகவன், தலைவர் டாக்டர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x