Published : 30 Aug 2021 03:16 AM
Last Updated : 30 Aug 2021 03:16 AM

ரத சப்தமி பிரம்மோற்சவத்துக்கு முன்பாக - செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு :

செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசும் எம்எல்ஏ ஜோதி.

திருவண்ணாமலை

செய்யாறில் தை மாத ரத சப்தமி பிரம்மோற்சவத்துக்கு முன்பாக வேதபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.82.04 லட்சம் மதிப்பில் திருப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வேதபுரீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி தலைமை வகித்தார். இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரத சப்தமி பிரம்மோற்சவ விழாக்குழு, லட்ச தீப விழாக் குழு, சிவ வாத்தியக்குழு, வசந்த விழாக் குழு, சமய தொண்டு மன்றம், திருவத்தூர் செங்குந்தர் சமுதாயத்தினர் உள்ளிட்ட பலரும் ஆலோ சனைகளை வழங்கினர். கூட்டத்தில், “வேத புரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தை மாதம் ரத சப்தமி பிரம்மோற்சவத்துக்கு முன்பாக நடத்துவது” என முடிவு செய்யப்பட்டது.

பின்னர், சட்டப்பேரவை உறுப் பினர் ஜோதி பேசும்போது, “ஆன்மீக பற்று உள்ளவர்களின் உணர்வுகளை மதித்து 100 திருக்கோயில்களில் குட முழுக்கு விழா நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.

இதில், வேதபுரீஸ்வரர் கோயிலும் இணைத்து கொள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மூலமாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் வலி யுறுத்தப்பட்டுள்ளது.

வேதபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக யாக சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு ரூ.1.25 கோடி நிதி தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தை மாத ரதசப்தமி பிரம்மோற்சவம் தடை இல்லாமல் நடைபெறும் வகையில் அதற்கு முன்னதாகவே, குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உறுதுணையாக இருக்கும். இதற் காக, எனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குகிறேன்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x