Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
கீழணையில் இருந்து பாசனத்து இன்று ( ஆக.29) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 12 -ம் தேதி அன்று பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்து. கல்லணையிலிருந்து ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் ஜூன் 24 கீழணையை வந்தடைந்தது. இந்நிலையில் இன்று மதியம் பாசனத்துக்காக கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வம் பாசன வாய்க்கால்களின் மதகுகளை திறந்து வைக்கிறார்.
கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடி பாசனமாக கொள்ளிடம் வடக்கு ராஜன், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை, வடவார் மற்றும் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் பாசனம் பெறும் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் மற்றும் வினாயகன்தெரு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட உள்ளன.
இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தகவலை பொதுப்பணித்துறையின் நீர் ஆதார அமைப்பின் கடலூர் கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர், சிதம்பரம் பொதுப்பணித்துறையின் நீர் ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் சாம்ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT