Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
கள்ளக்குறிச்சி நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களின் குடியிருப் புகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நேற்றுஆய்வு செய்தார். குடியிருப்பாளர்க ளிடம் குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். பழமைவாய்ந்த குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய குடியிருப்புகள் கட்டி தருவதற்கு திட்ட அறிக்கைகளை தயார் செய்து உடனடியாக பரிந்துரை செய்திட அறிவுறுத்தினார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டும் திட்டங்கள், சலுகைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தது:
அனைவரும் போற்றத்தக்க வகையிலான பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருபவர்கள்தான் தூய்மை பணியாளர்கள்.
அவர்களின் கோரிக்கையின்படி அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும். ஊதிய பட்டியல்நகலினை மாதந்தோறும் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு இஎஸ்ஐ உறுப்பினர் அட்டை உடனடியாக வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அனைத்து சலுகைகளும் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என்றும்தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அரசுக்கு இவ்வாணையம் பரிந்துரை செய்யும் என்றார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் ரா.மணி, நகராட்சி ஆணையர் எம்.குமரன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT