Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஊரக புத்தாக்க திட்ட செயற்குழு,பொதுக்குழு மற்றும் பிற துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது .
இதில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தது:
பண்ருட்டி, அண்ணாகிராமம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி மற்றும் குமராட்சி ஆகிய 6 வட்டாரங்களில் 280 ஊராட்சிகளில் கிராம முதலீட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதலீட்டு திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவில் உள்ள வெல்டர், பிளம்பர், பிட்டர்களை கண்டறிந்து ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமான தொழில்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து முத்ரா திட்டத்தின் கீழ் 2 பேருக்கு 10 லட்சத்து 83 ஆயிரத்து 750 ரூபாய் இந்தியன் வங்கியில் கடன் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், நபார்டு வங்கி மேலாளர் விஜய்நேகர், ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT