Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM

ரேஷன் கடை விற்பனையாளர்கள் வாயிலாக - கரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்த விழிப்புணர்வு : ராணிப்பேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள்

கரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் ரேஷன் கடை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 367 விற்பனையாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்ப ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு சங்கங் களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, பொது விநியோக திட்ட துணை பதிவாளர் முரளிகண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும் போது, ‘‘இயற்கை பேரிடர், பெருந்தொற்று காலங்களில் தொய்வின்றி செயல்படும் மிக முக்கியமான அத்தியாவசியப்பணி உணவுப்பொருள் வழங்கல் துறை ஆகும். உணவு பொருள் வழங்கல் துறையின் தூண்களாக செயல்படு வது ரேஷன் கடை பணியாளர்கள்.

இந்த பயிற்சி வகுப்பில் கடமைக்காக பங்கேற்காமல் மக்களுக்கு இன்முகத்தோடு சேவை அளித்திட சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பூசி பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. எனவே, தடுப்பூசி முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை பணியா ளர்கள் மற்றும் குடும்பத்தினர் கட் டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதில், ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருப்பது. விற் பனை முனைய கருவியை நல்ல முறையில் கண்காணிக்க வேண்டியது, கடைகளில் வைக்கப் பட்டுள்ள அறிவிப்பு பலகைகள், விற்பனை பொருட்கள் இருப்பு, காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் உடல் பராமரிப்பு, உடற்பயிற்சி, யோகா, சத்தான உணவு முறைகள் குறித்தும் விளக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x