Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM
புதுச்சேரியில் இருந்து பெங்களூர், திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகியஇடங்களுக்கு இன்று முதல் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக புதச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) மூலம் புதுச்சேரி - பெங்களுரு, புதுச்சேரி - திருப்பதி, புதுச்சேரி - குமுளி மற்றும் புதுச்சேரி - ஓசூர் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டிருந்த மேற்கண்ட நீண்ட வழித்தட பேருந்து சேவைகள் மீண்டும் இன்று (ஆக. 28) முதல் தொடங்கப்பட உள்ளது.
மேலும், சட்டப்பேரவைத் தலைவர், சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் முதலியார்பேட்டை எம்எல்ஏ ஆகியோரின் கோரிக்கைகளின் பேரில் நோணாங்குப்பம் - நாவற்குளம்,
அபிஷேகப்பாக்கம் - கீழ் அக்ரஹாரம் மற்றும் புவன்கரே வீதி ஆகிய வழித்தடங்களில் பிஆர்டிசி மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT