Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம் பகுதிகளில் - புதிய பாலங்கள் கட்டுமானம் - ஆட்சியர் ஆய்வு :

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்டியமல்லூர்- பூவாலை சாலையில் பரவனாற்றில் பாலம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நெடுஞ் சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகின் மூலம் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட குண்டியமல்லூர் - பூவாலை சாலையில் பரவானாற் றிற்கிடையே ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் 133.24 மீட்டர் நீளம் கொண்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.வீரசோழகன் பகுதியில் பொன்னேரி இடையே ரூ.3.30கோடி மதிப்பீட்டில் 59.40 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் பாலப் பணிகள், கே.ஆடூர் பகுதியில் பொன்னேரி இடையே ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் 41.64 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து புதுச்சேரி - நாகப்பட்டினம் மாநில நெடுஞ்சாலை நகரப் பகுதியான சிதம்பரம் அம்மாபேட்டையில் கான்சாகிப் வாய்க்கால் இடையே ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 20.01 மீட்டர் நீளத்தில் தொடங்கப்பட்டுள்ள பாலப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை) நாகராஜன், உதவி கோட்டப்பொறியாளர் சூரியமூர்த்தி, உதவிப் பொறியாளர் விமல்ராஜ், இளநிலை பொறியாளர் எழில் வளவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x