Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM
வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராகி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி கரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறந்து வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் வரும் செப் டம்பர் 1-ம் தேதி 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்பட உள்ளன. இதற்காக, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
அதேபோல், அனைத்து கல்லூரி களிலும் வரும் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு முகாம்கள்
மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி யிருக்க வேண்டும்.யாராவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், உடனடி யாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT