Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 10 நாட்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட் டத்தில் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 16-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. tvmdpc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் விவசாயிகள் திரண்டு காத்திருப்பதும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதும் தடுக்கப்பட்டுள்ளது.
7.5 ஏக்கருக்கு மேல் நெல் மூட்டைகளை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் விவரத்தை, கோட்டாட்சியர் சரிபார்த்த பிறகு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒளிவுமறையற்ற நடைமுறை களால் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முறைகேடாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 2,910 விவசாயிகள் சாகுபடி செய்துள்ள 12,820 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி வரை, 819 விவசாயிகளிடம் இருந்து 3,291 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நடப்பு சொர்ணவாரி பருவத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கூடுதலாக 10 நாட்களுக்கு என செப்டம்பர் 10-ம் தேதி வரை செயல்படும். இதற்கான முன்பதிவு இன்று (24-ம் தேதி) முதல் செயல்படுகிறது.
முன்பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரின் 94872-62555, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (வேளாண்) 93642-20624, உதவி வேளாண் அலுவலரின் 99439-83897 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT