Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியது:
கரோனா தொற்றிலிருந்து மக் களைக் காத்திடும் பொருட்டு தடுப்பு நடவடிக்கையாக விழுப்பு ரம் மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பணியாற்றிட வேண்டும்.
விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் தனித்தனியே மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் ஏற்படுத்த வேண்டும். அம்முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் துறையின் கீழ் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள். ஊராட்சி செயலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தி அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தரம் உயர்த் தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 24 மணிநேரமும் தடுப்பூசி முகாம் நடத்திட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 50 நபர்கள் வீதம் 334 ஊராட்சிகளில் 17,000 நபர்களுக்கும், ஒரு பேரூராட்சிக்கு தலா 500 நபர்கள் வீதம் 4,000 நபர்களுக்கும், ஒரு நகராட்சிக்கு 1,500 நபர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3,000 நபர்களுக்கும் ஆக மொத்தம் தினந்தோறும் 24,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விழுப்புரம் மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்று அறிவு றுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT