Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

வேளாண் உட்கட்டமைப்புகளுக்கு கடனுதவி :

தென்காசி ஆட்சியர் ச. கோபால சுந்தரராஜ் செய்திக் குறிப்பு:

வேளாண் உட்கட்டமைப்புக் கான நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்தில் வேளாண் பொருள் களுக்கான விநியோக தொடர் சேவையில் சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்ப்பதன வசதிகள், முதன்மைப் பதப்படுத் தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்துக்கான உட்கட்டமைப்புகள், அரசு மற்றும் தனியார் பங்கேற்பு டன் அமைக்கப்படும் உட்கட்டமைப் புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெறமுடியும்.

இந்த உட்கட்டமைப்புகளை உருவாக்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுப் பொறுப்பு குழு, வேளாண் தொழில்முனைவோர், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும்.

இத்திட்டத்தின் கீழ், அதிகபட்ச மாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு, 7 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப் பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.

இக்கடன் வசதியைப் பெற விரும்புவோர் மாதிரி விரிவான திட்ட அறிக்கையை agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக விவரங்களை பூர்த்தி செய்து, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கதவு எண் 93(10), 4வது தெரு, அண்ணா நகர், குத்துக்கல் வலசை, தென்காசி-627803 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். திட்டம் தொடர்பாக வேளாண் விற்பனைத்துறையை 99940 95773 அல்லது 70102 54484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x