Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் பதவி விலகியபிறகு நீண்டகால மாக கன்வீனர் கமிட்டியின் கீழ் பல்கலை. நிர்வாகம் செயல்பட்டது.
சுமார் ஒன்றரை ஆண்டு களுக்குப் பிறகு பேராசிரியர் வி. செல்லத்துரை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் தொடர்பாக சர்ச்சை, அவரது செயல்பாடுகள், நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றால் அவர் பதவி விலகினார்.
இதையடுத்து திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகப் பேராசி ரியரும், மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவ ருமான எம்.கிருஷ்ணன் 2019 டிசம்பரில் துணைவேந்தராக நிய மிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 4 மாதமே (டிச.31) உள்ளது. இந்நிலையில், அவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.
ஒரு மாதத்துக்கு முன்பே அவர் தேர்வு செய்யப்பட்டாலும், துணைவேந்தர் இல்லாத நேரத்தில் பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க 3 பேர் கொண்ட ‘கன்வீனர் ’ குழு இன்னும் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தரின் பதவிக் காலம் முடியும் முன்பே நிர்வாகக்குழு நியமிக்கப்படும்.
துணைவேந்தர் கிருஷ்ணன் மத்திய பல்கலை.யில் பொறுப் பேற்ற நிலையில், நிர்வாகக்குழு அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
இதுகுறித்து பல்கலை. நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
துணைவேந்தர் கிருஷ்ணன் மத்திய பல்கலைக்குச் செல்வதற்கு முன்பே நிர்வாகக் குழுவை நியமித்து இருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்றாலும், நிர்வாகக்குழுவை நியமிக்க, உயர்கல்வித் துறையிடம் சிறப்பு அவசர அனுமதியைப் பெற்றி ருக்க வேண்டும். அதற்கான முயற் சியையும் எடுக்கவில்லை.
நிர்வாகக் குழு தலைவர், உறுப்பினர் ஒருவர் தயார் நிலையில் இருந்தும், ஆளுநர் பிரதிநிதியை நியமிப்பதில் தாமதத் தால் உரிய வழிகாட்டுதல் இன்றி பல்கலை.யில் அலுவல் பணிகள் பாதிக்கின்றன.
ஏற்கெனவே தேர்வாணையர், பதிவாளர் போன்ற பணிகளையும் பொறுப்பு நிலையில் உள்ள பேராசிரியர்களே கவனிப்பதால் பல்கலை. நிதி நிர்வாகத்தில் கோப்புகளை கையாள்வதில் சிக் கல் நீடிக்கிறது.
தற்போதைய சிண்டிகேட் உறுப் பினர்களில் இருவரில் ஒருவரை ஆளுநர் பிரதிநிதியாக நியமிக்க முடியாததால் சட்டத்துறை அல்லது வேறு ஒரு துறை செயலரை நியமிக்கலாம் என்ற யோசனையிலும் தாமதம் ஏற் பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித் துறை, தமிழக ஆளுநர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து பல்கலை அதிகா ரியிடம் கேட்டபோது, உயர்கல்வி செயலர், கல்லூரிக்கல்வி இயக் குநர், பல்கலை பேராசிரியர் ஒருவர் அடங்கிய கன்வீனர் கமிட்டி சிண்டிகேட் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆக.,18) அல்லது நாளை இறுதி செய்யப்பட்டு, ஆளுநர் ஒப்புதலை பெற்றபிறகு குழு செயல்பட தொடங்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT