Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப் பட்டது. சுதந்திர தினத்தை யொட்டி வேலூர் மாவட்டத்தில் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, கோட்டை நுழைவு வாயிலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் சரகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஆட்சியர் குமார வேல் பாண்டியன் நற்சான்றுகள் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.
அதன்பிறகு, பல்வேறு துறைகள் சார்பில் 1 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 476 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றி தழ்கள் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக, சுதந்திரப்போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் இல்லத்துக்கே அரசு அலுவலர்கள் நேரில் சென்று தியாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன், மாவட்ட வருவாய் அலு வலர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.இவ்விழாவில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிறப்பு சிகிச்சை வார்டுகளில் பணியாற்றிய 10 தூய்மைப்பணியாளர்கள், 5 மருத்துவர்கள், 108 வாகன பணி யாளர்கள், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்கள், 21 வருவாய்த் துறையினர், மகளிர் திட்டத்துறை அலுவலர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.
இதையடுத்து, பல்வேறு துறை களின் சார்பில் 62 பயனாளி களுக்கு 38 லட்சத்து 31 ஆயிரத்து 88 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல்லத்துகே நேரில் சென்ற அரசு அதிகாரிகள் தியாகிகளுக்கு சால்வை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, துணை ஆட்சியர்கள் சேகர், சத்தியபிரசாத், தாரகேஷ்வரி, தாட்கோ மேலாளர் பிரேமா, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சியில் உள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.பின்னர், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு 1 கோடியே 19 லட்சத்து 56 ஆயிரத்து 827 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
இதையடுத்து, கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணி யாளர்கள், சித்த மருத்துவர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர்களுக்கு நற் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குநர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)வில்சன்ராஜசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வ நாதன் (ஆம்பூர்), வருவாய்த் துறையினர், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment