Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM
திருவண்ணாமலையில் சுதந்திர தின விழாவில் தியாகிகள் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, தி.மலை மாவட்டத்தில் உள்ள தியாகிகள் மற்றும் அவர்களது உறவினர்களை, வருவாய்த் துறையின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று கவுரவித்தனர்.
இந்நிலையில், அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறி திருவண் ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். தேசிய கொடியை ஏற்றிய பிறகு, காவல் துறையினரின் மரியாதையை ஏற்று கொண்டதும், தங்களை கவுரவிக்க ஆட்சியர் பா.முருகேஷ் வருகை தருவார் என்ற நம்பிக்கையில் தியாகிகள் காத்திருந்தனர்.
ஆனால், தேசிய கொடியை ஏற்றி வைத்தும், காவல் துறை யின் மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பா.முருகேஷ் அதன்பிறகு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டார். இதனால், தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர் புறப்பட்டு சென்றனர். 5 பேர் மட்டுமே காத்திருந்தனர். அவர்களில், 3 பேர் 75 வயதை கடந்த முதியவர்கள். அவர்களால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை அழைத்து வந்தவர்களும் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் பரிதவித்தனர்.
அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை ஊழியர் ஒருவரிடம், தாங்கள் நீண்ட நேரமாக காத் திருப்பதாக தெரிவித்தனர். அவர் உடனடியாக சென்று கோட்டாட்சியர் வெற்றிவேலிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் அவர், கூடுதல் ஆட்சியர் பிரதாப் மூலமாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதற்கிடையில், பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் வந்த ஆட்சியர் பா.முருகேஷ், 2 மணி நேரமாக காத்திருந்த 5 பேருக்கும், 11 மணியளவில் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT