Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM
கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்து, இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த, பேக்கரி உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நான், தங்க நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (27). இவர், கோவை சுக்கிரவார்பேட்டை பகுதியில் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்களுக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய நாங்கள், பின்னர் காதலித்து வந்தோம். என்னை காதலித்த போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி சிவக்குமார் என்னை பாலியல் கொடுமை செய்தார். தற்போது திருமணத்துக்கு மறுத்து விட்டார்.
இதுகுறித்து கேட்ட போது, சிவக்குமார் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து, சிவக்குமார் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என தெரிவித்திருந் தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில், மகளிர் காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர், பாலியல் கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT