Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM
புதுச்சேரியில் 113 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிப்பு சதவீதம் 2.01 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 5,629பேருக்கு கரோனா பரிசோ தனை செய்யப்பட்டது. இதில்புதுச்சேரியில் 67, காரைக் காலில் 12, மாஹே வில் 34 என 113 (2.01 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனை களில் 195 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 749 பேரும் என மொத்தமாக 944 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், நேற்று உயிரி ழப்பு ஏதுமில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,803 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 355 (97.75 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 15 லட்சத்து 68 ஆயிரத்து 798 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட் டுள்ளது. இதில் 13 லட்சத்து 40 ஆயிரத்து 626 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவுவந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 985 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT