Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM
நீட் அல்லாத இளநிலை பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம் தொடங் கியது.
புதுச்சேரி மாநிலத்தில் சென் டாக் மூலம் நிகழாண்டு (2021-22) இளநிலை தொழில் படிப்புகள், கலை அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நேற்று இதற்கான இணையவழி விண்ணப்பங்கள் விநியோ கத்தை கல்வி அமைச்சர் நமச்சி வாயம் தொடங்கி வைத்தார். கல்வித்துறை செயலர் வல்ல வன், இயக்குநர் ருத்ரகவுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன்படி இளநிலை தொழில் நுட்ப படிப்புகளான பிடெக், பிஎஸ்சி அக்ரி, ஹார்டிகல்சர், பிவிஎஸ்சி, பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிபார்ம், பிஏஎல்எல்பி, டிப்ளமோ படிப்புகளான டிஜிஎன்எம், டிஏஎன்எம், டிசிஇசி, டிஎம்எல்டி, டிடிடி, டிஏபிடி, டிசிஆர்ஏ, கலை அறிவியல் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, நுண்கலை படிப்புகளான பிபிஏ, பிவிஏ ஆகிய படிப்புகளுக்கான சென்டாக் வழி சேர்க்கைக்கு www.centacpuducherry.in என்ற இணையதளம் வழியாக விண் ணப்பங்கள் விநியோகம் நேற்று (ஆக.13) முதல் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட படிப்புகளுக்கு புதுச்சேரி, பிற மாநிலம், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் ஆகியோர் உரிய ஒதுக்கீடு தகுதியின்படி விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் கலை, அறிவியல் கல்லூரியில் 4,260 சேர்க்கை இடங்களும், தொழில்நுட்ப படிப்புகளுக்கு 3,907 சேர்க்கை இடங்களும் என்று மொத்தம் 8,167 சேர்க்கை இடங்களுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT