Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM

வரும் 26-ம் தேதி புதுவை பேரவை துணைத் தலைவருக்கான தேர்தல் : சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தகவல்

புதுச்சேரி

வருகிற 26-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவை துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது என்று புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் சட்டப்பேரவையில் உள்ள தனது அறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம் காலை ஆளு நர் உரையும், மாலையில் சட்டப் பேரவை துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறுகிறது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவை எத்தனை நாட் கள் நடத்துவது, பட்ஜெட் தாக் கல் செய்யும் நாள் குறித்தும் முடி வுகள் அறிவிக்கப்படும்.

பட்ஜெட் தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு கோப்பு தயாரிக்கப்பட்டு, அனுமதி கோரி ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு அனுமதி கிடைத்துவிடும். முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

வருகிற 23-ம் தேதி முதல்வர், அமைச்சர்களுடன் டெல்லி சென்றுபிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதி அமைச் சர் உள்ளிட்டோரை சந்திக்க இருக் கிறோம். அப்போது புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான அத்தனை திட்டங்கள் சம்பந்தமாகவும், மூடப் பட்டுள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி தனியார் பங்களிப்புடன் இயக்கு வது சம்பந்தமாகவும் கோரிக்கை விடுக்க உள்ளோம்.

கூட்டுறவு சர்க்கரை ஆலையைதிறந்து இயக்க ரூ.34 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டு மின்றி ரூ.100 கோடி கேட்டுள் ளோம். மேலும் மாநில வளர்ச்சிக் காக கூடுதலாக ரூ.500 கோடி மானி யமாக கேட்க உள்ளோம். புதிய சட்டப்பேரவைக்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது.

அதற்காக மத்திய உள்துறை அமைச்சர், மக்களவைத் தலை வரிடம் தேதி கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத் தவுடன் அதுதொடர்பாக தெரியப் படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x