Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மணல் கொள்ளை தொடர்பாக மாநகராட்சி தலைமை பொறியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட் சியர் பதிலளிக்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் மாநகராட்சி தலைமை பொறியாளர் அரசு தலைமையில் நடக்கிறது.
கட்டுமானப் பணிக்காக பெரி யார் பஸ் நிலையத்தில் 30 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் இருந்த மணலை கனிமவளத் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால் தலைமை பொறியாளர் அரசு, கனிமவளத்துறை அதிகாரி களுக்கு தெரிவிக்காமல் ரூ.15 கோடி மணலை கடத்தி தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளார்.
இது தொடர்பாக தலைமை பொறியாளர் அரசு மீது நட வடிக்கை கோரி மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை.
ஏற்கெனவே அவரது அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வு, இதுபோன்ற செயல்களை கடும் குற்றமாக பார்க்க வேண்டும். மனு தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர், மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் கனிமவள இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT