Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM

காளையார்கோவில் ஒன்றியக் கூட்டத்தில் - அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் : இருக்கையால் தாக்கியதில் ஒருவர் காயம்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவில் ஒன்றியக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் மாறி, மாறி இருக்கைகளை வீசிக் கொண்டதில் ஒருவர் காய மடைந்தார்.

காளையார்கோவில் ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி (அதிமுக) தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கவுன்சிலர் மகேஸ்வரன் (அதிமுக) பேசு கையில், ‘பிளீச்சிங் பவுடர், முகக் கவசங்கள் வாங்கியதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள் ளது. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒன்றியத் தலைவரிடம் பேச முடியவில்லை.

மொபைலில் அழைத்தாலும் அவரது கணவரே எடுக்கிறார். கவுன்சில் நிதி ஒதுக்கீட்டிலும் பார பட்சம் காட்டுகின்றனர்,’ என்றார்.

இதையடுத்து அவரது பேச்சுக்கு கவுன்சிலர் மனோகரன் (அதிமுக) எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடை யே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை, ஒருவர் தாக்கி கொண் டனர். பின்னர் இருக்கைகள், பெயர் பலகைகளை மாறி, மாறி வீசினர். இதில் மகேஸ்வரன் காயமடைந்தார். மேலும் தனது கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறி மகேஸ் வரன் தலைவர் இருக் கையின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை மற்ற கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து கவுன்சிலர் பாண்டி யராஜன் (திமுக) பேசுகையில், ‘அதிகாரிகள் ஊராட்சித் தலை வர்களுக்கு கொடுக்கும் முக்கி யத்துவம், கவுன்சிலர்களுக்கு கொடுப்பதில்லை.

கடந்த கூட்டத்திலேயே கூட்ட ரங்கில் முதல்வர் படத்தை வைக் கும்படி தெரிவித்தோம். ஆனால் இதுவரை வைக்கவில்லை,’ என் றார்.

துணைத் தலைவர் ராஜா (பாஜக) பேசுகையில், ‘மஸ்தூர்கள் நியமனம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

மேலும் அவர்கள் பணி செய் கிறார்களா? என்பதே தெரியவில் லை,’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x