Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

மேலப்பாளையத்தில் - பழைய டயர் கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து : 5 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது

மேலப்பாளையத்தில் பழைய டயர்கள் வைத்திருந்த கிட்டங்கியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.

திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் பழைய டயர்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் பெரும் தீவிபத்து நிகழ்ந்தது. தீயணைப்பு படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கருப்பந்துறையை சேர்ந்த பழைய டயர்களை வாங்கி விற்பனை செய்யும் ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான கிட்டங்கி, மேலப்பாளையம் ராஜாத்திகாலனி ராஜா கோயில் அருகே உள்ளது. இந்த கிட்டங்கியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்து டயர்கள் மளமளவென எரிந்தது. இதனால் புகைமூட்டம் வெளிக்கிளம்பியது.

பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமை யில் தீயணைப்பு படையினர் 3 வண்டிகளில் அங்கு சென்று தீயை அணைக்க போராடினர். 5 மணிநேர போராட்டத்துக்குப்பின் தீ அணைக்கப்பட்டது. கிட்டங்கியிலிருந்த பழைய டயர்களும், வெளியே நிறுத்தி வைத்திருந்த 2 மினி சரக்கு வாகனங்களும் எரிந்து நாசமாயின. சேதமதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலப் பாளையம் போலீஸார் விசாரிக் கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x