Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
புதுச்சேரி நகராட்சிக்கு கடந்த 33 மாதங்களாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வரி பாக்கி வைத்துள்ளனர். வரி பாக்கி வைத்துள்ள இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர். கடந்த வாரம் புதுச்சேரி நகராட்சி எல்லைகளில் இயங்கி வந்த 6 கேபிள் டிவி நிறுவனங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமியை கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர் சந்தித்து பேசினர். இணைப்பு துண்டிப்பை நிறுத்தி வைக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனாலும், இன்றும் இணைப்பை துண்டிக்கும் பணி நடைபெற்றது. நைனார்மண்டபம், நேதாஜிநகர், தேங்காய்திட்டு, கொம்பாக் கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களின் கட்டுப் பாட்டு அறையில் அதிகாரிகள் போலீஸாருடன் சென்று துண்டித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT