Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

போலி பெண் மருத்துவர் கைது : காரைக்குடியில் தனியார் கிளினிக்குக்கு ‘சீல்’

காரைக்குடி

காரைக்குடி கலைமணி நகரில் அழகு மருந்தகம் நடத்தி வருபவர் சுகன்யா சுந்தர ராஜன். இவர் மருந்தகம் அரு கிலேயே கிளினிக்கும் செயல் பட்டு வந்தது. இங்கு இரவு நேரங்களில் காரைக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். ஆனால் மருத்துவர் வராத மற்ற நேரங்களில் சுகன்யா சுந்தரராஜன் மருத்துவம் பார்த்து வந் துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டிக்கு புகார் சென்றது. அவரது உத்தரவில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது சுகன்யா சுந்தரராஜன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

இதையடுத்து கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள், போலி மருத்துவர் சுகன்யா சுந்தர ராஜனை பிடித்து காரைக்குடி அழகப்பா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் மருத்துவப் படிப்பு படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x