Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வேதபாராயணத்துக்காக மதுரை வடக்கு வட்டம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நன்செய் நிலம் கொடுக்கப்பட்டது. அந்நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். தனியார் ஆக்கிரமிப்பில் இருந்ததை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன்படி கோயில் துணை ஆணையர் தி.அனிதா, மதுரை உதவி ஆணையர் மு.விஜயன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் தனியாரின் ஆக்கிரமிப்பிலிருந்த ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
அலங்காநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT