Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM
தனியார் நிறுவனங்களின் பங்க ளிப்பு நிதியுடன், கரூர் தனியார் மருத்துவமனை மூலம் 25,638 கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் கரோனா சிறப்பு வார்டை நேற்று திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா 3-வது அலை குழந்தை களை அதிகளவில் தாக்கும் எனக் கூறப்படுவதால், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், அரசு மருத்துவம னைகளில் குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 வென்டிலேட்டர் வசதியுடன் 100 படுக்கைகளைக் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்புடன், கரூர் அப்போலோ மருத்துவமனையில் 25,638 தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளன. கரூர் அரசு பழைய மாவட்ட தலைமை மருத்துவமனையை, அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை மருத்துவமனையாக மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, அரவக்குறிச்சி அருகேயுள்ள பெரியவளையப் பட்டி துணை சுகாதார நிலையம், கரூர் பழைய அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்த அமைச் சர், கரூர் நகராட்சி பல்நோக்கு அரங்கத்தில், தனியார் மருத்து வமனை மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங் கிவைத்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, கரூர் தனியார் அரங்கத்தில் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியது:
சர்க்கரை, உயர் ரத்த அழுத் தம், பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் 20 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் கரோனா ஊரடங்கால் மருத்துவ மனைகளுக்கு சென்று மருந்து வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். தொற்றா நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ளாமல் ஆண் டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர்.
இத்தகைய உயிரிழப்பைத் தடுக்கவே, மருந்து, மாத்தி ரைகளை வீட்டுக்குச் சென்று வழங்கும் வகையில், மக்க ளைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கோட்டாட் சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணி யன், வட்டாட்சியர் சக்திவேல், எம்எல்ஏக்கள் குளித்தலை இரா.மாணிக்கம், கிருஷ்ணராய புரம் க.சிவகாமசுந்தரி, அரவக் குறிச்சி ஆர்.இளங்கோ உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT