Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையத்திலிருந்து, டவுனுக்கு செல்லும் பிரதான சாலை மிகமோசமாக சேத மடைந்து காணப்படுகிறது. போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியிருக்கும் இச்சாலையில் அபாயகரமான பயணத்தை வாகன ஓட்டிகள் மேற்கொள்கிறார்கள்.
திருநெல்வேலி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் பல்வேறு கட்டுமானங்கள் நடை பெற்று கொண்டிருக்கின்றன. இத் திட்டங்களுக்காக மாநகரில் புதிய, பழைய மற்றும் பாளையங் கோட்டை பேருந்து நிலையங்கள் பயன்பாட்டில் இல்லை. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக முக்கிய சாலைகள் உடைக்கப்பட்டு இன்னமும் சீர்செய்யப்படாமல் இருக்கின் றன. இச் சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், ஆடிக்காற்றில் புழுதி கிளம்பி நகரின் முக்கிய வீதிகளில் வியாபாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. விபத்துகளும் நேரிட்டு வருகின்றன.
அத்தகைய அபாயகரமான நிலையில்தான் மேலப்பாளையத் திலிருந்து டவுனுக்கு செல்லும் சாலையும் இருக்கிறது. இச்சாலையில் மேலநத்தம் பகுதியில் சாலை இருப்பதற்கான அடையாளமே தெரியாத வகையில் சேதமடைந்துள்ளது. ஓரடிக்கு கூட சாலை இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே இப்பகுதியை கடந்து சென்று வருகிறார்கள். இரவு நேரங்களில் மின்விளக்கு வெளிச்சமும் இல்லாத இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நேரிட்டு வருகின்றன.
மழை காலங்களில் சேதமடைந்த சாலையின் குண்டு குழியில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை அவதியுற செய்துவருகிறது.
குடிநீர் குழாய் பதிப்பதற் காக சாலையோரம் தோண்டி யவர்கள் அப்படியே மாதக் கணக்கில் இடிபாடுகளை போட்டு சென்றுவிட்டார்கள்.
இதனால் பல இடங்களில் சாலையே தடம் தெரியாமல்போயிருக்கிறது. போக்குவரத்துக்கு தகுதியற்றதாக காணப்படும் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை கள் வைக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுஒருபுறம் இருக்க மேலநத்தம் பகுதியில் சாலையை யொட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT