Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

‘மிஸ்டு கால்’ மூலம் சமையல் எரிவாயு இணைப்பு பெறலாம் :

சென்னை

மிஸ்டு கால் மூலம் புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், புதிய இணைப்பு வழங்கப்படும். இன்டேன் எல்பிஜி வாடிக்கையாளர்கள், தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்து, சிலிண்டரை புக் செய்யலாம்.

மேலும், ஒரு சிலிண்டர் இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே, இரண்டாவது சிலிண்டர் இணைப்பைப் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம், வாடிக்கையாளர்களுக்கு நேரம் மிச்சமாவதுடன், மூத்த குடிமக்களுக்கும், ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்யா தெரிவித்துள்ளார். இந்த தகவல் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x