Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கூட்டம், ஆகஸ்ட் 14-ம் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.14) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல், அடுத்து வரவுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் திமுகவிடம் எவ்வாறு தொகுதிப் பங்கீடு செய்வது, கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக மதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT