Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
ஓய்வுபெற்ற அரசு கல்லூரி ஆசிரியர்கள் ரூ.1.2 லட்சம் கரோனா நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கினர்.
புதுவை அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர். ஓய்வுபெற்ற அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் சோலைமலைச்சாமி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வேலாயுதம் மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினர். கடந்த ஆண்டும் நிவாரண நிதியாக ரூ.64 ஆயிரத்தை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரை சந்தித்தபோது, நீண்டநாள் கோரிக்கையான பல்கலைக்கழக மானியக்குழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT