Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 8,953 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு வேளாண் - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 19,116 மனுக்கள் பெறப்பட்டன. பரிசீலனை செய்யப்பட்டதில் 8,953 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
அதன்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை (ம) உழவர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், வருவாய் துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.49,50,775 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கள் பேசும்போது, “தமிழக முதல்வரின் சீரிய திட்டமான ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களைகரோனா தொற்று காலத்திலும் உடனடியாக பரிசீலனை மேற்கொண்டு தீர்வு கண்டிருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்தஅனைத்து அரசு அலுவலர் களுக்கும் எங்களது பாராட்டு தல்களை தெரிவிக்கிறோம்” என்று கூறினர். இந்நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT