Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

கடலூரில் 73 பேர் கரோனாவால் பாதிப்பு :

விருத்தாசலம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து மாவட்டத்தில் தொற்றுஎண்ணிக்கை 61,144 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 30பேருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 44,166பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 34பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் 43,473 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 341பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 341பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 43 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 29,490 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை மாவட்டத்தில் 199 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x