Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

எம்பிக்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு :

மதுரை

தமிழக எம்பிக்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுக்கும், தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது, ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில், மனுதாரருக்குத் தவறுதலாக ஆங்கிலக் கடித இணைப்பு அனுப்பப்படவில்லை. பின்னர் ஆங்கிலக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், புதிய நாடாளுமன்றக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுப்பிய கடிதமும் இந்தியில்தான் அனுப்பப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகு ஆங்கில கடிதம் அனுப்பப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x