Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
மதுரை காந்திய சிந்தனைக் கல்லூரி, காந்தி நினைவு அருங்காட்சியகம், புதுடில்லி தேசிய காந்தி அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து "காந்தியம் வாழ்விக்க வந்த அயல் நாட்டு மகளிர் "எனும் தலைப்பில் இரு நாள் கருத்தரங்கை இணைய வழியில் நடத்தின.
காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா தலைமை வகித்தார். கருத்தரங்கின் நோக்கத்தை பேராசிரியர் முத்து இலக்குமி விளக்கினார். தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணாமலை வரவேற்றார்.
மறைந்த மூத்த காந்திய தலைவர்கள் மகரிஷி அருணா சலம், மு.நடராஜன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத் தப்பட்டது. பேராசிரியர் ஆண்டியப்பன் மகரிஷி அருணாசலம் குறித்து நினைவுரை வழங்கினார். யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் ச.மனோன்மணி, மலேசியா ஆசிரியை சந்திரா ராமசாமி, காந்தியக் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரேமா, காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் ரகுபதி, உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர்
சோ.கி.கல்யாணி, மகாராஷ்ட்ரா ஜல்கான் காந்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜான்செல்லத்துரை உள்ளிட்ட பேராசிரியர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தனர். காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பங்கஜம் நிறைவுரை ஆற்றினார். காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் ஆர்.நடராஜன் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார். இயக்குநர் நந்தா ராவ் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT