ஞாயிறு, நவம்பர் 17 2024
Last Updated : 10 Aug, 2021 03:16 AM
Published : 10 Aug 2021 03:16 AM Last Updated : 10 Aug 2021 03:16 AM
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்தார். சுண்டக்காமுத்தூரில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து, தூய்மை பணியாளர்களின் வருகைப் பதிவேடு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, பைபாஸ் சாலையில் செயல்பட்டுவரும் சில்லறை மீன் விற்பனை அங்காடியை புல்லுக்காடு பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT