Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால் - ‘டான்’ படக் குழுவினருக்கு அபராதம் :

ஆனைமலை முக்கோணம் பகுதியில் சினிமா படப்பிடிப்பை காண திரண்ட பொதுமக்கள்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதால் ‘டான்’ படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் மற்றும் ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தகவலறிந்து, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரண்டனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த சிலர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் கூட்டத்தை கலைத்தனர்.

படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததால், வால்பாறை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் ஆனைமலை வட்டாட்சியர் விஜயகுமார் வந்து விசாரணை மேற்கொண்டனர். முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடைபெறுவது தெரியவந்தது.

இதையடுத்து, படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் படக் குழுவினர் 18 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். படக் குழுவுக்கு வருவாய்துறையினர் ரூ.19,400 அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x