Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை 200-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். அவர்கள் கூறும்போது, ‘‘ அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் தினமும் 300 வீடுகளில் கரோனா சர்வே பணி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் எங்களுடைய துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே கரோனா சர்வே பணியில் இருந்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்உதவியாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள் ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT