Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
புதுவையில் உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய முதியோர், விதவை, முதிர்க்கன்னி உதவித் தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் இன்று முதல் கிடைக்கும் என்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து, முதல் வராக ரங்கசாமி கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றார்.
பதவியேற்றவுடன் முதியோர், விதவை, முதிர்க்கன்னி, திருநங் கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகையை ரூ.500 உயர்த்தியும், புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிதி நெருக்கடியால் அத்தொகை உடனடியாக வழங்கப்படவில்லை. இதற்கிடையே உயர்த் தப்பட்ட உதவித்தொகை தரும் கோப்புக்கு ஆளுநர் தமிழிசையும் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து இம்மாத உதவித்தொகையுடன் உயர்த்தப்பட்ட தொகை ரூ.500 சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகை நேற்று அரசு சார்பில் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பயனாளிகள் இத்தொகையை வங்கியில் பெறலாம்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
"உயர்த்தப்பட்ட ரூ.500 கூடுதல் உதவித்தொகையானது 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது. இன்று முதல் வங்கிகளை அணுகி பயனாளிகள் உதவித்தொகையை பெறலாம். 18 வயது முதல் 59 வயது வரை உள்ள பயனாளிகள் ரூ.1,500ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயது முதல் 79 வயதுவரை உள்ள முதியோர் 2 ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும் உதவித்தொகை பெறுவார்கள். மேலும் 10 ஆயிரம் புதிய கூடுதல் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் 13-ம் தேதி முதல் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் 13-ம் தேதி கணக்கில் செலுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT