Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 677 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 44, காரைக்காலில் 8, ஏனாமில் 1, மாகேவில் 10 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7,38,344 பேருக்கு தடுப்பூசி
புதுவையில் 53, காரைக் காலில் 20, மாகேவில் 5 பேர் என 78 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் தற்போது 834 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர்.புதுவையில் 2வது தவணை உட்பட 7 லட்சத்து 38 ஆயிரத்து 344 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT