Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

விழுப்புரம் மாவட்டத்தில் - விதை விற்பனை மையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு :

விழுப்புரத்தில் உள்ள விதை விற்பனை கிடங்கில் உள்ள விதைகளை ஆய்வு செய்யும் வேளாண் அதிகாரிகள்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விதை விற்பனை மையங்களில் நேற்று தனிப்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குநர்(பொறுப்பு) சோமு தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது விதை விற்பனை பதிவேடு, விதை உரிமம், விற்பனை ரசீது, விதை சேமிப்பு முறைகள், காலாவதியான விதைகள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். கொள்முதல் விவரம் மற்றும் இருப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

தரமான சான்று பெற்ற விதைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தவறுகள் கண்டறியப்பட்டால் விற்பனைக்கு தடை விதிப்பதுடன் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து இக்குழுவினர் கூறியது: விவசாயிகள் விதைகள் வாங்கும்போது விற்பனை நிலையங்களில் விதை விவர அட்டையில் உள்ள விவரங்களை சரிபார்த்து விதை குவியல், முளைப்புத் திறன் சதவீதத்தை கேட்டு தெரிந்து விதைகளை வாங்க வேண்டும் என்றனர். அப்போது விதை ஆய்வாளர்கள் சௌந்தரராஜன், தமிழ்வேல், அரவிந்தராஜ், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x